தற்போவது உள்ள அனைத்து பணிகளின் முடக்கம் – இங்கே மட்டுமல்ல, உலகில் உள்ள இரண்டு பில்லியன்/ 20 கோடி மக்களை பாதித்து வருகிறது – இது கோவிட்-19 எவ்வளவு அபாயமானது என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்தயிருக்க வேண்டும். பலர் இன்னும் புரிந்து கொள்ளாதது என்னவென்றால், நம் துறைமுகங்களை மூடுவதோ ஒரு மாதம் வரை அனைத்து பணிகளும் முடக்கப்படுவதோ இப்பிரச்சனைக்கு முடிவு காணாது. Continue reading
Category Archives: தமிழ்
தற்போதைய MOH மூலோபாயத்தை விட செலவு பயன் பகுப்பாய்வு அதிக சோதனையை ஆதரிக்கிறது
பணிநிறுத்தம் (தேசிய ஊரடங்கு உத்தரவு, வீட்டிலிருந்து வேலை செய்தல், பள்ளி மூடல்) மற்றும் வெளிநாட்டு வருகையாளர்களின் தொடர்புகளை MOH தேடுதல் ஆகியவை நோயின் தற்போதைய வெடிப்பைக் கட்டுப்படுத்துவதில் உதவும். மேலும் பத்து நாட்களுக்குள் புதிய நோய்தொற்றுகளை பூஜ்ஜியத்திற்குக் கொண்டு வரக்கூடும். சமீபத்திய தரவுகளில் அது நடப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.
வைரஸின் பரவலைத் தடுக்க MOH-இன் மூலோபாயம் செயல்படும், ஆனால் அது போதுமானதும் இல்லை அதைத் தக்கவைக்கவும் முடியாது. தற்போது பொருளாதாரம் இயங்க முடியா நிலை, வேலையின்மை அதிகரிக்கும், வணிகங்கள் நொடித்துவிடும், வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடையும், அரசாங்கத்திற்கு வருவாய் இராது. அன்றாட வாழ்க்கையை மீண்டும் துவங்கவும் பொருளாதாரம் முன்னேறவும் வணிகங்களையும் பள்ளிகளையும் திறக்க நாம் அனுமதிக்க வேண்டும்.
Continue reading
இலங்கையில் COVID-19 தொற்று உடையவர்களின் நோயின் மூலத்தை காட்சிப்படுத்தும் வரைபடம்
இலங்கையில் COVID-19 தொற்று உடையவர்களின் மூலத்தை காட்சிப்படுத்தும் வரைபடம்
அன்று மார்ச் 24, 2020 அன்று வெளியிடப்பட்டது
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கைப் போலவே, இலங்கை தனது கோவிட் -19 தொற்று உடையவர்களின் தினசரி விவரங்களையும், முக்கியமான முக்கியமான தொடர்புத் தேடலின் கண்டுபிடிப்புகளையும் வெளியிடத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் சிங்கப்பூரர்களை எவ்வாறு தகவலறிந்து வைத்திருக்கிறது என்பதை இங்கே, இங்கே மற்றும் இங்கே பாருங்கள். இது துரதிர்ஷ்டவசமானது, ஏனெனில் இது பொதுமக்களின் நம்பிக்கையையும் தேவையான கடினமான நடவடிக்கைகளைப் பற்றிய புரிதலையும் வளர்க்க உதவுகிறது, அத்துடன் வதந்தி மற்றும் போலி செய்திகளை எதிர்த்துப் போராட உதவும். இரட்டிப்பாக துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் அதிக வெளிப்படைத்தன்மை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் முயற்சிகளில் நன்கு பிரதிபலிக்கும். Continue reading
இலங்கையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 100 ஐ எட்டுகிறது
எதிர்பார்த்தபடி, தொற்று உடையவர்களின் தற்போதைய எழுச்சி COVID-19 இன் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று உடையவர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தியுள்ளது. இது சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது அடுத்த வாரத்திற்காவது எண்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று தெரிகிறது. ஆனால் இது சில நாட்களில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது சாதகமான அறிகுறியாகும். மேலும் இந்த போக்கு மற்ற நாடுகளில் காணப்படும் திடீர்பருக்கின் அசுர வளர்ச்சி விகிதத்தைக் காட்டவில்லை.
பரிசோதனை திறனை விரிவாக்குவதற்கான முதலீட்டை அரசாங்கம் அவசரமாக அதிகரிக்க வேண்டும்
கோவிட் -19 உடன் 2021 வரை நீடிக்கும் ஒரு நீண்ட போராட்டத்தை நாங்கள் எதிர்கொள்கிறோம். தற்போதைய நோய்ருக்கை நாங்கள் கட்டுப்படுத்தினாலும், ஆண்டு முழுவதும் எங்கள் எல்லைகளை முழுமையாக மூடாவிட்டால் புதிய பெருக்குகள் நடக்கும். இறக்குமதி செய்யப்படும் தொற்றுநோய்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து விமான இணைப்புகளை எவ்வாறு பராமரிப்பது மற்றும் தொடர்ந்து Continue reading
covidsl – ஒரு உத்தியோகப்பூர்வமற்ற இலங்கை கொரோனா நோய்க்கிருமி பின்தொடர் (ட்ராக்கர்)
கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான இசங்கா விஜரத்னே உருவாக்கிய இலங்கை கோவிட் நிகழ்வுககளின் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படும் இந்த பின்தொடரை(ட்ராக்கரை) நாங்கள் கண்டோம்: http://covidsl.com. இது மொத்த நிகழ்வுகளில் தற்போதைய எண்ணிக்கை மற்றும் மாற்றங்கள், செய்யப்பட்ட சோதனைகள் மற்றும் குணமடைந்தோரின் எண்ணிக்கையை தெரிவிக்கிறது.
Continue reading
கோவிட் -19: இது எவ்வளவு கொடியது?
ஒரு பெரிய கேள்வி என்னவென்றால், எங்களுக்கு ஒரு பெரிய COVID-19 நோய்பெருக்கு ஏற்பட்டால் எத்தனை பேர் இறப்பார்கள்? Continue reading
எதற்காக இந்த வலைப்பதிவு ?
தனிப்பட்ட கருத்துக்களையும் அவ்வப்போது ஆராய்ச்சி குறிப்புகளையும் பகிர்ந்து கொள்ள ஒரு வலைப்பதிவு தேவை என்று நீண்ட காலமாக நான் யோசித்து வருகிறேன். ஐ.எச்.பி. (IHP) இல் நாங்கள் செய்யும் பல வேலைகள் ஒருபோதும் பகிரப்படுவதில்லை – நேரமின்மை அல்லது பணம் இல்லாததால். எனவே சிலவற்றை முறைசாரா அல்லது தற்காலிக வடிவத்தில் பகிர்ந்து கொள்ள வலைப்பதிவு ஒரு நல்ல மேடையாக தோன்றியது. ஐ.எச்.பி.யில் ஆய்வு பணிகள் மற்றும் அன்றாட அலுவல்கள் நிமித்தம் இதை செய்ய இயலாதது வருந்தத்தக்கது. இருப்பினும், நன்றே செய் அதுவும் இன்றே செய் என்று கருதி, வெள்ளிக்கிழமையும் 13-உம் கூடி வரும் நாள் சிலரால் சுபமற்றது என கருதப்பட்டாலும், COVID-19 நெருக்கடி இதை துவங்க வேண்டிய நேரம் இது என்று உந்தியது. தகவல்கள் மற்றும் கருத்துக்களை பரிமாறுவதற்கு இது ஒரு தடமாக இருக்கப்போகிறது. அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என நான் நம்புகிறேன். இது பயனுள்ளதா, படித்ததில் பிடித்தது மற்றும் உடன்பாடில்லாதது என்று எல்லாவற்றையும் எனக்குக் கண்டிப்பாக தெரியப்படுத்தவும்.
வைத்தியர் ரவி ரன்னன்-எலிய
கொழும்பு
13 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை