தொற்று பரவும் வேகம் பற்றி புரிந்துகொள்ள நம்மிடம் உள்ள ஒரே தரவு/இலக்கு தொற்றியல் பிரிவு தினமும் வெளியிடும் தொற்றாளரின் எண்ணிக்கை. இதைவிட உகந்த இலக்கு effective reproduction number என்று குறிப்பிடப்படும் இனப்பெருக்க எண்ணின்(Reff), குறு(ங்) கால அறிக்கை. தொற்று நோயியல் பிரிவு இதை வெளியிடுவதில்லை. இத்தரவு அவர்கள் வழக்கமாக கணிக்கும் ஒன்றா என்பதும் நமக்குத் தெரியாது. அப்படி கணித்தால் தகவல் அறியும் உரிமையின்(RTI ) சட்டத்தின் சாரத்தின்படி அதனை அவர்கள் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
நம்மிடம் தற்போது உள்ள தரவு ஆறுதல் தரும் விதத்தில் இல்லை. நாளாந்த தொற்றாளிகளின் எண்ணிக்கை அக்டோபர் 25-லிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 450 தொற்றுகள் என்ற நிலை மாறாமல் உள்ளது. நிலைமை சாதாரனமாக இருந்தால் இது தொற்றின் பரவலை நாம் கட்டுப்படுத்திவிடோம் என்பதை காட்டுவதாகவும், அதாவது பரவல் ஏறவும் இல்லை குறையவும் இல்லை (Reff=1) என்றும் அர்த்தமாகுவதாக வைத்துக்கொள்ளலாம். இந்நிலை உகந்தது அல்ல, காரணம் நாளாந்த தொற்றாளிகளின் எண்ணிக்கை ஒரே நிலையில் இருந்துகொண்டு குறையவில்லை என்றாலும், நிலைமை மோசமாகவில்லை என எடுத்துக்கொள்ளலாம்.
நாளாந்த தொற்றாளிகளின் அறிக்கை, அக்டோபர் – நவம்பர் 2020
மூலம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் COVID-19 தரவு களஞ்சியம் மற்றும் IHP COVID-19 தரவுதளத்தில் உள்ள தரவுகள் கொண்டு கணித்தது.
துரதிஷ்டவசமாக இது தற்போதைய நிலைமை இல்லை. இதற்கு நான்கு காரணங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
முதல் காரணம், 24 அக்டோபர் முதல் நம் PCR பரிசொதனைகளின் எண்ணிக்கையும் நாளொன்றுக்கு 10,000 பரிசோதனைகள் என ஒரே நிலையில் இருப்பது. நமது தற்போதைய அதிகபட்ச திறன் ஒரு நாளைக்கு சுமார் 12,000 பரிசோதனைகள் ஆகும். இதுவும் ஆய்வக ஊழியர்களின் பெரும் முயற்சியினால் தான். நடைமுறையில், இதை நெடுங்காலம் தக்கவைப்பது சாத்தியமில்லை. எனவே பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரே அளவில் இருப்பதன் காரணம் நாம் நமது அதிகப்ட்ச பரிசோதனை திறனை அடைந்துவிட்டதால் இருக்கக்கூடும். நாளாந்த புதிய தொற்றுகளின் எண்ணிக்கை ஒரே நிலையில் இருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம், அதாவது ஒரு நாளில் அதிகபட்சமாக நாம் கண்டெடுக்க முடிந்த தொற்றாளிகளின் எண்ணை பரிசோதனை திறன் காரணமாக அடைந்துவிட்டதால்.
நாளாந்த பரிசோதனைகள், அக்டோபர் – நவம்பர் 2020
மூலம்: சுகாதார அமைச்சு நாளாந்த பரிசோதனைகள் குறித்த அறிக்கை
இரண்டாவதாக, இது வழக்கமான நோய்பெருக்கைன்றால், தொற்றாளிகளின் எண்ணிக்கை கூடி, தகுந்த நோய் கட்டுப்பாடு செயற்பாடுகள் கொண்டுவந்த பின் பரவல் குறைந்து, அதன் விளைவாக தொற்றாளிகளின் எண்ணிக்கை உச்சமடைந்து பின் முடங்கவேண்டும். பொதுவாக கட்டுப்பாடு நடவடிக்கைகள் நடைமுறைபடுத்தப்பட்ட பின் ஓரிரு வாரங்களில்தான் தொற்றாளிகளின் எண்ணிக்கை உச்சமடையும். இதன் காரணம் பரவல் முடக்கப்பட்டாலும் தொற்றாளிகளின் மதிப்பீட்டீல் இது பிரதிபலிக்க சில நாட்கள் ஆகும்.
மூன்றாவதாக, ஆரம்பக்கட்டத்தில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தால் – அதாவது தொற்றாளிகள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக தனிமைபடுத்தப்பட்டிருந்திருந்தால், அடுத்து அடையாளம் காணப்படும் தொற்றாளிகள் தனிமைப்படுத்தியவரின் மத்தியில் இருந்து மட்டுமே வந்திருப்பார்கள். மேலும் இதன் காரணமாக நாளாந்த தொற்றாளிகளின் எண்ணிக்கை ஒரு நிலையான விகிதமாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு அல்லாமல் சமூகத்தில் புதிய தொற்றுகள் கண்டெடுக்கப்படுவதாக ஊடகங்களில் கூறப்படுவதால் இது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றுகள் முன்னமே அடையாளம் காணப்பட்ட கொத்தணியுடன் தொடர்பு கொண்டவை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளதை நான் அறிவேன். எனினும் புதிய தொற்றுகள் சமூகத்தில் கண்டெடுக்கப்பட்டு அதன் பின்னர் கொத்தணியுடன் உள்ள தொடர்பு கண்டுபிடிக்கப்படுகிறது/ அறியப்படுகிறது என்பது எனது யூகம்.
நான்காவதாக, செப்டம்பர் மாத்தத்தில் புதிய தொற்றுகளுக்கான பரிசோதனைகளின் விகிதம் 200-இல் இருந்து தற்போது 22-ஆக குறைந்துள்ளது. உளகளவிலும் நாம் காண்பது, இந்த விகிதத்தை நெருங்கும்போது பெரும்பாலான தொற்றுகள் கண்டுபிடிக்கப்படாமல் போய்விடும். கொழும்பில் சீரற்ற பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோரில் 30% தொற்றாளிகள். என இன்று கொழும்பு நகராட்சி மன்றம் முதன்மை அதிகாரி அறிவித்துள்ளதால், நிலைமை இதைவிட மோசமாக இருப்பதைதான் காட்டுகிறது.
தற்போது உள்ள நோய் கட்டுப்பாடு செயற்பாடுகள் போதுமானதல்ல என்ற முடிவு தவிர்க்கமுடியாதது.
நாம் காண்பது மலைபோன்ற இந்த பிரச்சினையின் நுணியில் ஒரு சிறு பகுதிதான். அநேகமாக அடையாளம் காணப்படாமல் தொற்று நூற்றுக்கணக்கில் தினமும் பரவிக்கொண்டிருக்கின்றது. இது உண்மையாக இருந்தால் பரவலை முடக்க மேற்கொண்ட கட்டுப்பாடு நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்ற முடிவு தவிர்க்கமுடியாதது.
பரிசோதித்தல், தொடர்புகளை கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் தான் இந்த தொற்றை கட்டுப்படுத்த நம்மிடம் உள்ள மிகுந்த பயனுறுதி வாய்ந்த வழி. முக கவசம் மற்றும் முழு பணி முடக்கம் போன்ற பிற கட்டுப்பாட்டு நடவடிக்களை காட்டிலும் இது சிறந்தது. முதல் அலையில் தொற்றின் திறமான இனப்பெருக்க எண்ணை தொடர்ந்து 1-க்கு கீழ் (பரவலை முடக்க தேவையான அளவு) கட்டுப்படுத்தி வைத்திருந்த நாடுகள் தொற்று ஒன்றிற்கு 100-க்கும் கூடுதலான பரிசோதனைகளை மேற்கொண்டனர். கீழே உள்ள வரைபடத்தில் இதை காணலாம். தற்போதைய பரிசோதனை ஏற்பாடுகள் மற்றும் தொற்று பரவும் வேக்த்தினாலும், இது இலங்கையில் சாத்தியமில்லை.
பரிசோதனை விகிதம் (TCR) மற்றும் பிற நாடுகளில் COVID-19 பரவல், மார்ச் – ஜூன் 2020
மூலம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் COVID-19 தரவு களஞ்சியம் மற்றும் IHP COVID-19 தரவுதளம் கொண்டு செய்த பகுப்பாய்வு. குறிப்பு: பகுப்பாய்வு மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் நடுப்பகுதிவரையிலான காலத்தை உள்ளடக்கும். கீழ் அச்சில் மடக்கை படுத்தப்பட்ட (லாக்/log) பரிசோதனை விகிதம் தரப்பட்டுள்ளது. பச்சை சதுரம் மேலே குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையின் பரிசோதனை விகிதத்தை குறிக்கும். பச்சை கோடு இலங்கையின் தற்போதைய பரிசோதனை விகிதமான 23 (அ) மடக்கைப்படுத்தப்பட்டால் 3.1-ஐ குறிக்கும். மடக்கைப்படுத்தப்பட்ட பரிசோதனை விகிதம் 100, 4.6 ஆகும்.
பரிசோதனைகளை கூட்டுவது பரவலை முடக்க பிற கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது என கடுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பரவல் மோசமடையும். இந்நிலை நீடிக்க பிரச்சனை பெரிதாவதோடு, பரவலை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவது கடினமாகிவிடும்.