நோய்பெருக்கில் இருந்து வெளியே வருவதற்கு எங்களுக்கும் இருக்கும் பாதைகள் குறித்த கட்டுரையை இன்னும் எழுதிக்கொண்டிடுப்பதால் இதை முன்னதாகவே பகிர்ந்து கொள்கிறேன்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் SARS-னால் பாதிக்கப்பட்ட கிழக்கு ஆசிய நாடுகளே தற்போதைய சூழலில், இதுவரை மிகவும் வெற்றிகண்டுள்ளன. இதுவே அவர்களை பின்பற்றுவதில் ஒரு முட்டுக்கட்டையாக எங்கள் மனதில் உருவாகியுள்ளது என்று நினைக்கிறேன். இது அவர்களுடன் எங்களுக்கு பல கலாச்சார ஒற்றுமைகள் இருந்தபோதும், அவர்களில் சிலரின் சுகாதார சேவைகள் அமைந்திருக்கும் விதம் நம்மை ஒத்து இருந்த போதும் உள்ளது.
நியூசிலாந்து இப்போது நோய்பெருக்கை குறைப்பதை விட நேரடியாக நீக்குவதை தேர்ந்தெடுத்துள்ளது. இது அவ்வாறு செய்த முதல் மற்றும் ஒரே ஆசியரல்லாத, மேற்கத்திய நாடு ஆகும்.
எங்களைப் போலவே, நியூசிலாந்திற்கும் SARS அனுபவம் இல்லை. அவர்களும் ஒரு தீவு, நம் இருவர்க்கும் மேலும் கிழக்கு ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கிடைத்திருக்கும் தரவகளும் ஒன்று. ஆனால் அவர்களின் பிரதமரும் அரசாங்கமும் தொற்றுநோயியல், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்தின் மூலோபாயத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைபடுத்தப்பட்ட முக்கிய கூறுகள்:
- எல்லை கட்டுப்பாடுகள்
- எதிர்கால பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்த பரவலான பரிசோதனை
- பொது சுகாதாரம்
- அனைத்து பணி முடக்கம் உட்பட சமூக தொலைவு
- பொது தொடர்பு
நீக்குதலை உபாயமாக மேற்கொண்டால், தற்போதைய அனைத்து பணி முடக்கம் நமக்கு தந்த இடைவெளியை பயன்படுத்தி # 2 “பரவலான பரிசோதனை” க்குத் தேவையான பரிசோதனைத் திறனை உயர்த்த வேண்டும். மே 1 துவங்கும் போது ஒவ்வொரு நாளும் 2,000–6,000 பரிசோதனைகளை நாங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று ஐ.எச்.பி மதிப்பிட்டுள்ளது. MOH தொற்றுநோயியல் நிபுணர்களின் கணிப்பும் இதே போன்ற எண்களை முடிவு செய்துள்ளனர்.
நீக்குதலை உபாயமாக பின்பற்றும் நிலையில் உள்ள அனைத்து நாடுகளிலும், பணி முடக்க இடைவெளியை பயன்படுத்தி பரிசோதனைத் திறன் குறைபாடை சரிசெய்ய தீவிரமாக செயல்படாத ஒரே நாடு இலங்கை மட்டுமே.
தேசிய அளவில் நாங்கள் தொடர்ந்து பின்தங்கியிருப்பது எனக்கு வருத்தத்தை தருகிறது. நேற்று, இந்த மாத இறுதிக்குள் அரசாங்கத்திற்கு மிகக் குறைந்த செலவில் MOH-இன் பரிசோதனைத் திறனை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்பை இழந்தோம். உள்ளூர் நன்கொடையாளர்கள் பெரும்பாலான செலவுகளுக்கு நிதியளித்தபோதும், நிதி 100,000 அமெரிக்க டாலர்கள் குறைவாக இருந்தது.
பரிசோதனை குறைபாடை நிவர்த்தி செய்ய நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டும், அதை இப்போதே செய்ய வேண்டும்.
இது மே மாத பணி முடக்கத்திற்குபின் நாம் சமாளிக்கக்கூடிய ஒன்றல்ல. உலக அளவில் உபகரணங்கள் மற்றும் பொருட்களுக்கான விநியோக நேரம் ஒவ்வொரு நாளும் நீடிக்கிறது. மேலும் பணக்கார நாடுகளான அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்கள் பணத்தை பயன்படுத்தி நம்மைப் போன்ற ஏழை நாடுகளை வரிசையில் பின்தள்ளுகின்றன.